என் மலர்
செய்திகள்

குடியரசு தின விழாவில் உண்ணாவிரதம் இருக்க முயற்சி: 2 பேர் கைது
குடியரசு தின விழாவில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற 2 பேரை கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து கைது செய்தனர்.
சூலூர்:
கருமத்தம்பட்டி நால்ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், ஊஞ்சப்பாளையம் பிரிவில் நிழற்குடை அமைக்க கோரியும் குடியரசு தின விழாவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி, மாதப்பூர் ஜெயகுமார் ஆகியோர் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை கனியூர் ஊராட்சி அலுவலகம் முன்பு வேலுச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அப்போது கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து வந்து 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story