என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூரில் புத்தக திருவிழா 27-ந் தேதி தொடங்குகிறது
  X

  பெரம்பலூரில் புத்தக திருவிழா 27-ந் தேதி தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் ஜன. 27 முதல் பிப். 5 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
  பெரம்பலூர்:

  பெரம்பலூரில் கடந்த 5 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, தேசிய புத்தக அறக்கட்டளை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் சார்பில் இம்மாதம் 27ந்தேதி முதல் பிப்.5 ஆம் தேதி வரை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

  இதற்காக அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு, புத்தகத் திருவிழா நடைபெறுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  புத்தகக் கண்காட்சியை பார்வையிட வரும் பொது மக்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். மைதானத்தை சீர்படுத்தி குறித்த காலத்திற்குள் அரங்குகள் அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

  ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் சீனிவாசன், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் மணிவாசகம், செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
  Next Story
  ×