என் மலர்

    செய்திகள்

    லால்குடி அருகே சுடுகாட்டில் மர்மமான முறையில் பெண் பிணம் எரிப்பு: வாலிபரை கைது
    X

    லால்குடி அருகே சுடுகாட்டில் மர்மமான முறையில் பெண் பிணம் எரிப்பு: வாலிபரை கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லால்குடி அருகே சுடுகாட்டில் மர்மமான முறையில் பெண் பிணம் எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லால்குடி:

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெரு சலக்குடி ஊராட்சி பகுதியில் வள்ளிவயல் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் இருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியுள்ளது.

    இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் கரும்பு சக்கைகளை கொண்டு பெண்ணின் பிணத்தை எரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த ஊர் பொதுமக்கள் இது குறித்து லால்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பிணத்தை எரித்துக் கொண்டிருந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் வேளாங்கண்ணியை சேர்ந்த முருகேசன் (வயது 45) எனவும் இது தனது பாட்டியின் பிணம் எனவும் கூறினார்.

    அவரது உறவினர்களின் விலாசத்தை ஊர் பொதுமக்கள் கேட்டுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். மேலும் அவர் அந்த பகுதியில் பொம்மைகளை விற்பனை செய்து வந்ததும் இந்த பிணத்தை தள்ளுவண்டியில் வைத்து இங்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாதி எரிந்த நிலையில் இருந்த பெண் பிரேதத்தை கைப்பற்றி, அடித்து கொலை செய்து இங்கு பிணத்தை எரித்து கொண்டிருந்தாரா? அல்லது இவருடைய பாட்டியா? என பல்வேறு கோணங்களில் போலீசார் முருகேசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×