என் மலர்
செய்திகள்

வன்முறையின்போது மாநகர பஸ்கள் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது
சென்னையில் வன்முறையின்போது மாநகர பஸ்கள் கண்ணாடியை உடைத்த 4 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
ராயபுரம்:
சென்னை மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கடந்த 23-ந்தேதி வன்முறை ஏற்பட்டது.
பல இடங்களில் மாநகர பஸ்கள், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோட்டில் 6 மாநகர பஸ்களின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டது.
இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
பஸ்கள் உடைக்கப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் மாநகர பஸ் சேதப்படுத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரைச் சேர்ந்த ராக்கி ராஜேஷ், மோகன், சிவகாமி நகரைச் சேர்ந்த ஜான்சன், மங்கம்மா தோப்பைச் சேர்ந்த சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story