என் மலர்
செய்திகள்

அ.தி.மு.க பிரமுகர் மரணம்: சசிகலா இரங்கல்
கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். நாதன் சாலை விபத்தில் மரணமடைந்ததையடுத்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள செய்தியில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகர் மாவட்டம், காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த எஸ்.எம். நாதன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், கீரணத்தம் ஊராட்சியில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத்துயரம் அடைந்தேன்.
அன்புச்சகோதரர் நாதனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்திற்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story