என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் மாணவர்கள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
    X

    புதுக்கோட்டையில் மாணவர்கள் மீது தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

    ஜல்லிக்கட்டை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கண்டன முழக்கங்களுடன் பேரணியாக வந்த அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மர்ர்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கவிவர்மன், இந்திய கம்ïனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் செங்கோடன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செய லாளர் கலைமுரசு ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சி.பி.எம் சார்பில் செல்வராஜ், பொன்னுச்சாமி,  ஜியாவுதீன்,  நராயணன், சலோமி, அன்புமணவாளன், பாலசுப்பிரமணியன், விக்கி, நிரஞ்சனா, லட்சாதிபதி, தமிழரசன், சி.பி.ஐ. சார்பில் தர்மராஜன்,  மாதவன்,  ராசு,  ராமச்சந்திரன், முருகானந்தம், சசி, திருநாவுக்கரசு, வி.சி.க. சா ர்பில் திலீபன், பாவாணன், திருமறவன், சின்னு, அழகு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×