என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டர் நிலம் பாதிப்பு - கலெக்டர் தகவல்
    X

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டர் நிலம் பாதிப்பு - கலெக்டர் தகவல்

    ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரபாகரன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    பருவமழை பொய்த்ததால் தமிழ்நாடு முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.

    எனவே தமிழ்நாட்டுக்கு வறட்சி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

    இதைத்தொடர்ந்து வறட்சி பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய ஆய்வு குழுவினர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

    இதில் ஒரு பிரிவினா நேற்று ஈரோடு மாவட்டம் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று  வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    அப்போது ஒருசில இடங்களில் செடிகளின் மேல் பாகம் பச்ச பசேல் என்று இருந்தது. இதை பார்த்த ஆய்வு குழுவினா இங்கு செடிகள் நன்றாக வளாந்து உள்ளதே என்று கூறினர்.

    அந்த ஆய்வு குழுவினரிடம்  விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் வெளியில் பார்ப்பதற்கு செடிகள் பசுமையாக உள்ளது. ஆனால் உள்ளே வேர்கள் காய்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறினர்.

    மேலும் அந்த செடிகளை வேரோடு பறித்து ஆய்வு குழுவினரிடம் காண்பித்தனர் . அப்போது வறட்சியின் உண்மையான தன்மை குறித்து ஆய்வு குழுவினர் தொந்து கொண்டனர்.

    இதன்பிறகு ஈரோடு காளிங்கராயன் இல்லத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட பயிர்கள் பற்றியும் ஆய்வு குழுவினரிடம் வீடியோ பட காட்சி மூலம் போட்டு காண்பிக்கப்பட்டது.

    இதை பார்த்த ஆய்வு குழுவினர் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

    பிறகு ஆய்வு குழுவினர் இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரிடம் இன்று காலை மாலைமலர் நிருபர் இது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது-

    ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மத்திய ஆய்வு குழுவினர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அரசுக்கு அறிக்கை கொடுத்து உள்ளோம்.

    இதன் மதிப்பு குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதன் அறிக்கையும் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×