என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவன்-மனைவியை கொன்ற 4 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை
    X

    கணவன்-மனைவியை கொன்ற 4 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை

    ஈரோடு அருகே கணவன்-மனைவியை கொன்ற 4 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை அளித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அருகே உள்ள கணக்கம்பாளையம் சின்னகாளியூரை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 60). விவசாயி. இவரது மனைவி கண்ணாயாள் (55).

    இவர்கள் அங்குள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் வீட்டுக்கு சரவணன் (24), செல்வன் (30), கணேசன் (24), விஜயன் (33) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அப்போது சூரி கத்தியால் கணவன்-மனைவி 2 பேரையும் குத்தி கொலை செய்து விட்டு மோதிரம் மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.

    பங்களாபுதூர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதில் நீதிபதி திருநாவுக்கரசு இன்று தீர்ப்பு கூறினார். ஒவ்வொருவருக்கும் பவ்வேறு பிரிவின் கீழ் தலா 4 ஆயுட்கால தண்டனையும் மற்றும் 10 ஆண்டு, 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜர் ஆனார்.

    Next Story
    ×