என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த பஞ்சாயத்து ஊழியர்
    X

    போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த பஞ்சாயத்து ஊழியர்

    பதவி உயர்வு பெற போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்த பஞ்சாயத்து ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி ஊராட்சியில் கிளார்க்காக வேலை பார்த்து வருபவர் ராமமூர்த்தி (37). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு பதவி உயர்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து அவரது மதிப்பெண் சான்றிதழை நாகை கலெக்டர் பழனிச்சாமியிடம் சமர்பிக்க உத்தரவிடப்பட்டது.

    ராமமூர்த்தி 10-ம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே தனக்கு பதவி உயர்வு கிடைக்காது என்ற சந்தேகத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஒரு சில பாடங்களில் கூடுதல் மதிப்பெண் அளித்து போலியாக சான்றிதழ் தயாரித்து கலெக்டரிடம் சமர்பித்துள்ளார்.

    ஆனால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இதனை ஆய்வு செய்த போது போலி சான்றிதழ் தயார் செய்தது தெரிய வந்தது.அவரிடம் விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி வட்டார ஊராட்சி அலுவலர் மனோகரன் பொறையாறு போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் முருகவேல் பஞ்சாயத்து கிளார்க் ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×