என் மலர்
செய்திகள்

கடலூரில் போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
பீட்டா அமைப்பை வெளியேற்ற வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பிய போராட்டக்காரர்ககளை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
கடலூர்:
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாணவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு போராட்டத்தை தொடங்கினர்.
மழை காரணமாக தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு போராட்ட களம் மாற்றப்பட்டது. அங்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
நேற்று இரவும் போராட்டம் நீடித்தது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்ட பந்தலில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை போலீஸ் துணை சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் போராட்டம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கு மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என்று மாணவர்களிடம் தெரிவித்தனர்.
இதை நாங்கள் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறினர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் கலந்து ஆலோசித்தனர். பின்னர் மாணவர்கள் போலீசாரிடம் நாங்கள் எங்களது அறவழி போராட்டத்தை கைவிடுவதாக கூறினர். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்தனர். அவர்கள் அங்கு நின்று கொண்டு ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும். பீட்டா அமைப்பை வெளியேற்ற வேண்டும் என்று கோரி 15 நிமிடத்திற்குமேல் கோஷம் எழுப்பினர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
இதனால் கடலூர் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம் அருகே 6-வது நாளாக நடைபெற்ற மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம் முடிவுக்கு வந்தது.

Next Story