என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு கோரி கோபியில் விவசாயிகள் மாட்டு வண்டி ஊர்வலம்
    X

    ஜல்லிக்கட்டு கோரி கோபியில் விவசாயிகள் மாட்டு வண்டி ஊர்வலம்

    ஜல்லிக்கட்டு கோரி கோபியில் விவசாயிகள் மாட்டு வணடிகளில் ஊர்வலமாக வந்தனர். மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நிரந்தர தீர்வு காணாமல் போராட்டம் ஓயாது என்று கூறினர்.

    கோபி:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோபியில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றம் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 5 நாட்களாக கோபி பெரியார் திடலில் கூடி தங்களது ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில், கோபியில் விவசாயிகள், மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோபி வாய்க்கால் ரோட்டிலிருந்து 5 இரட்டை மாட்டு வணடிகளில் ஊர்வலமாக வந்து கோபி பெரியார் திடலில் அடைந்தனர். தொடர்ந்து இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

    கோபியில் இன்று மாணவ-மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நிரந்தர தீர்வு காணாமல் போராட்டம் ஓயாது என்று கூறினர்.

    Next Story
    ×