என் மலர்
செய்திகள்

மொடக்குறிச்சி அருகே தொழிலாளி தற்கொலை
மொடக்குறிச்சி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டை அடுத்த 46 புதூர் பொயார் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 48). தொழிலாளி. கடந்த சில நாட்களாக இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் பிராந்தியில் விஷத்தை கலந்து குடித்து விட்டார்.
இதனால் மயக்க நிலையில் கிடந்த அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ராமச்சந்திரன் இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






