என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கும்பகோணம் - பட்டுக்கோட்டையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மேலக்காவேரி இ.எஸ்.எம்.பி நகரை சேர்ந்த அப்துல்லா மகன் பஷீர்அகமது (வயது33). மேலக்காவேரி வடக்கு குடியான தெருவை சேர்ந்த ஷேக்அஜீஸ் மகன் ஷேக்நியாஸ் (வயது34). இவர்கள் மீது சுவாமிமலை பகுதியில் கடந்த மார்ச் மாதம் மாணவர் ஒருவரை கொலை செய்ததாக வழக்கு உள்ளது.
இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சுகுணா, பஷீர்அகமது, ஷேக்நியாஸ் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் (வயது23). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, மணிகண்டனை கைது செய்து திருச்சி மத்திய ஜெயிலில் அடைத்தார்.