என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்
  X

  திண்டுக்கல் போலீசில் காதல் ஜோடிகள் தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் திண்டுக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

  திண்டுக்கல்:

  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நான்குமூலை கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் இந்துமதி. (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்த ஒடிசா மாநில வாலிபர் அகய்குமாருக்கும் (23) காதல் ஏற்பட்டது.

  இந்த விபரம் தெரியாத நிலையில் இந்துமதியின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க மாப்பிள்ளை பார்த்தனர். இதனை அறிந்த இந்துமதி காதலனை திருமணம் செய்வதற்காக அவருடன் திண்டுக்கல் வந்தார்.

  கோட்டை மாரியம்மன் கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் 2 பேரின் பெற்றோரிடம் பேசி சமரசம் செய்தனர். அவர்கள் ஏற்றுக் கொண்டதால் மணமக்களை திருச்செந்தூர் இந்துமதியின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

  பழனி குபேர பாளையத்தைச் சேர்ந்தவர் சங்கீதா (வயது 20). பழனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அங்கு வேலை பார்க்கும் திண்டுக்கல் திருமலைச்சாமிபுரம் சுரேஷ் (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

  சங்கீதாவுக்கு பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் முடித்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் பெற்றோரை வரவழைத்து பேசினார். இதில் சங்கீதாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து காதலர்களை போலீசார் சுரேசின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×