என் மலர்

  செய்திகள்

  ராசிபுரம் அருகே மாடுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்
  X

  ராசிபுரம் அருகே மாடுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு: கல்லூரி மாணவர்கள் போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராசிபுரம் அருகே மாடுகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  ராசிபுரம்:

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாச்சல் என்ற இடத்தில் ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு 31 நாட்டு மாடுகளை ஏற்றிச்சென்ற லாரியை அப்பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த மாடுகளை லாரியில் இருந்து கீழே இறக்கி, தண்ணீர் கொடுத்து இளைபாற வைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறோம். பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் வலியுறுத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டுக்கு தடை செய்யப்பட்டு இருக்கிறது.

  ஆனால், இன்று காலையில் 31 நாட்டு மாடுகள் லாரிகளில் அடைத்து வைத்து எடுத்து செல்கிறார்கள். லாரியில் அடைத்திருந்த இந்த மாடுகள் மூச்சுவிடுவதற்கே பெரிதும் சிரமம் அடைந்தது.

  மாடுகள் எங்களுக்கு பிரியமானவை. துன்புறுத்தல்களுக்கு மாடுகள் ஆளாவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாடுகளை மூச்சுவிடாமல் அடைத்து ஏற்றி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலங்குகள் நல வாரியம் இந்த மாடுகளை மீட்டு பராமரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  ராசிபுரம் பகுதியில் உள்ள முள்ளுக்குறிச்சியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இளைஞர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் மாடுகளுடன் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் காமராஜ், வக்கீல்கள் பாச்சல் சீனிவாசன், பா.ம.க. நிர்வாகி மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அதுபோல கோனேரிப்பட்டி இருந்து இளைஞர்கள் கோ‌ஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்று ராசிபுரம் பழைய பஸ் நிலையத்திற்கு சென்றடைந்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.
  Next Story
  ×