என் மலர்

  செய்திகள்

  தீபா பேரவையில் 4 லட்சம் பேர் இணைந்துள்ளனர்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி
  X

  தீபா பேரவையில் 4 லட்சம் பேர் இணைந்துள்ளனர்: ஒருங்கிணைப்பாளர் பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் தீபா பேரவையில் 4 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்று ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் பேட்டியளித்துள்ளார்.
  கோவை:

  கோவையில் தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் கட்சியின் புதிய தலைமை மீது அதிருப்தியுடன் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்க வேண்டும் என அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் விரும்புகிறார்கள்.

  இதனை கருத்தில் கொண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 -ந்தேதி தீபா தலைமையிலான புதிய கட்சி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

  மேலும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தீபா போட்டியிடுவார். இதற்காக அகில இந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது. கட்சியின் தற்காலிக சின்னமாக சேவல் சின்னம் வைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வையும் , இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற அனைத்துவித நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தும் முயற்சியில் கட்சி தொடங்கப்படவில்லை.

  புதியதாக தொடங்கப்பட உள்ள அகில இந்திய அம்மா திராவிட கழகத்தில் அ.தி.மு.க.வின் பல மூத்த தலைவர்கள் இணைய உள்ளனர். தற்போது அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதுவரை கோவை மாவட்டத்தில் மட்டும் 4 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  பேட்டியின் போது ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர்,கார்த்திகேயா செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.
  Next Story
  ×