என் மலர்

  செய்திகள்

  திருத்துறைப்பூண்டியில் தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதம்
  X

  திருத்துறைப்பூண்டியில் தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டியில் மின்கசிவு காரணமாக தீடீரென தீ பிடித்தததில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி மீனாட்சி வாய்க்கால் கீழத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் சுரேஷ்(40) விவசாயி. இவரது கூரை வீட்டில் இன்று மாலை மின்கசிவு காரணமாக திடீரென தீ பிடித்தது. இதில் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமாயின. மேலும் அருகில் உள்ள லாடமுத்து மனைவி இந்திராவின்(40) வீடு மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 3 பேர் வீடுகளும் எரிந்தது.

  தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர், பொறுப்பு அலுவலர் வீரமணி, தீயணைப்பு வீரர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்த கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட 2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாயின.

  திருத்துறைப்பூண்டி இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள், காமராஜ், ராஜ்குமார் உள்ளிட்டோர் விசாரணை செய்து வருகின்றனர்.

  Next Story
  ×