என் மலர்

    செய்திகள்

    விருதுநகரில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை
    X

    விருதுநகரில் வாலிபர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டி நல்லம்மாள் காம்பவுண்டை சேர்ந்தவர் இளங்கோ (வயது 30) இவர், அங்குள்ள மாத்திநாயக்கன்பட்டி ரோடு பகுதியில் நள்ளிரவில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் விருதுநகர் கிழக்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இளங்கோவின் மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெல்மெட்டும் கிடந்துள்ளது. ஹெல்மெட் உடைந்துள்ளது.

    இளங்கோ உடல் கிடந்த இடத்தில் வாகன விபத்து ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர் கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×