என் மலர்

  செய்திகள்

  திருத்துறைப்பூண்டி அருகே சாலையை சீரமைக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு மறியல்
  X

  திருத்துறைப்பூண்டி அருகே சாலையை சீரமைக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு மறியல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டி அருகே சாலையை சீரமைக்ககோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்களம் ஊராட்சியிலிருந்து மேட்டுப்பாளையத்தை இணைக்கும் முருகம் பாளையம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இந்தப்பகுதியில் வசிக்கும் 2 சமூகத்தினரில் ஒரு சமூகத்தினர் குறிப்பிட்ட பாதை வழியாக செல்லும்போது தகராறு ஏற்படுவதாகவும் அதனால் சாலைகளை சரிசெய்ய வேண்டுமென போராட்டங்கள் அறிவித்து தாசில்தார் அலுவலகத்தில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

  இருப்பினும் சாலைகள் சரிசெய்யப்படவில்லை. இந்நிலையில் நேற்று இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறை நடுநிலையாக நடந்து கொள்ளாமல் ஒருதரப்பைச் சேர்ந்த 4 பேரை மட்டும் கைது செய்தது.

  போலீசார் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்வதாக கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பள்ளங்கோவில் மற்றும் இந்தப்பகுதியைச் சேர்ந்த கிளைச்செயலாளர்கள் குணசேகரன், தயாளன் ஆகியோர் தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் விளக்குடி உலகநாதன், விவசாய சங்க ஒன்றிய துணைச்செயலாளர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலையில் கடியாச்சேரி பேருந்து நிலையம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்துறைப் பூண்டி-மன்னார்குடி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ் பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் தங்கதுரை உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும், விரைவில் சாலைகள் அமைக்க ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

  Next Story
  ×