என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்தை பிரித்து கேட்டதால் ஆத்திரம்: தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன்
    X

    சொத்தை பிரித்து கேட்டதால் ஆத்திரம்: தம்பியை கட்டையால் அடித்து கொன்ற அண்ணன்

    துரைப்பாக்கம் அருகே சொத்து தகராறில் தம்பியை அண்ணன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவான்மியூர்:

    துரைப்பாக்கத்தை அடுத்த பெருங்குடி, சீவரம் 2-வது தெருவில் வசித்து வருபவர் உஷா. இவரது மகன்கள் ராஜீ, ரவி (வயது23). ராஜீ திருமனம் ஆகி குடும்பத்துடன் பெரும்பாக்கத்தில் வசித்து வந்தார்.

    கடந்த 14-ந்தேதி உஷாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து ராஜீ பெற்றோர் வீட்டுக்கு வந்து இருந்தார்.

    நேற்று இரவு குடிபோதையில் இருந்த ரவி, அண்ணன் ராஜீவிடம் சொத்தை பிரித்து கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த ராஜீ மரக்கட்டையால் ரவியை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜீவை கைது செய்தனர். ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது .

    சொத்து தகராறில் தம்பியை அண்ணன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×