என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் முன்னாள் டி.ஜி.பி.திலகவதி மகன் வீட்டில் கொள்ளை
  X

  சேலத்தில் முன்னாள் டி.ஜி.பி.திலகவதி மகன் வீட்டில் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் முன்னாள் டி.ஜி.பி. திலகவதி மகன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  சேலம்:

  தமிழக முன்னாள் டி.ஜி.பி.யாக இருந்தவர் திலகவதி. இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரபு திலக். டாக்டரான இவரும் சென்னையில் வசித்து வருகிறார்.

  பிரபு திலக்கிற்கு சேலம் அழகாபுரம் என்.டி.எஸ். நகரில் வீடு உள்ளது. இங்கு விடுமுறை நாளில் பிரபு திலக் வந்து செல்வார். வேலைக்கார பெண் ஒருவர் அவ்வப்போது வந்து வீட்டை சுத்தம் செய்து செல்வார்.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலைக்கார பெண் பிரபு திலக்கின் வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து சென்றார். பொங்கல் பண்டிகை என்பதால் கடந்த 2 நாட்களாக வேலைக்கார பெண் வீட்டிற்கு வரவில்லை. இன்று காலை வேலைக்கார பெண் பிரபுதிலக்கின் வீட்டிற்கு வந்தார்.

  அப்போது வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு திருடர்கள் உள்ளே புகுந்து இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த வேலைக்கார பெண் இந்த திருட்டு குறித்து பிரபுதிலக்கிற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சேலம் பேர்லேண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

  இதன் பேரில் போலீசார் பிரபு திலக்கின் வீட்டிற்கு சென்று விசாரித்து வருகிறார்கள்.

  சென்னையில் இருந்து பிரபுதிலக் வந்த பின்னர் தான் வீட்டில் என்னென்ன பொருட்கள் திருட்டு போனது என தெரியவரும். இந்த திருட்டு சம்பவம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
  Next Story
  ×