என் மலர்

  செய்திகள்

  பழனியில் டெங்கு காய்ச்சலால் பிளஸ்-2 மாணவர் பாதிப்பு
  X

  பழனியில் டெங்கு காய்ச்சலால் பிளஸ்-2 மாணவர் பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனியில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-2 மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

  பழனி:

  பழனி ரெயில்வே பீடர் ரோட்டில் குடியிருப்பவர் பாலகுருநாதன் கூலித்தொழிலாளி. அவரது மகன் சத்திய நாராயணன் (வயது 17) தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ் -2 படித்து வருகிறார்.

  கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பழனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. சத்திய நாராயணனுக்கு பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அவர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

  உடனே அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  Next Story
  ×