என் மலர்

  செய்திகள்

  தேனி அருகே குழந்தையுடன் இளம்பெண் கடத்தல்
  X

  தேனி அருகே குழந்தையுடன் இளம்பெண் கடத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே குழந்தையுடன் கடத்தப்பட்ட இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

  தேனி:

  தேனி அருகே உள்ள மேல் மங்களம் அம்மாபட்டியை சேர்ந்தவர் ரவி.அவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஒரு வழக்கு தொடர்பாக ரவி 3 வயது மகனுடன் பெரியகுளம் கோர்ட்டுக்கு சென்றார்.

  மாலை நேரம் வீடு திரும்பிய போது வீட்டில் மனைவி இல்லை. அவர்அக்கம் பக்கம் தேடி பார்த்தார். எங்கு தேடியும் ராஜேஸ்வரியை காணவில்லை.

  எனவே இதுகுறித்து ரவி ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரில் மனுவில் வீட்டில் கைக்குழந்தையுடன் தனியாக இருந்த எனது மனைவி ராஜேஸ்வரியை எங்கள் பகுதியை சேர்ந்த ஜக்கணன் (26) என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் என கூறி உள்ளார்.

  அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×