என் மலர்
செய்திகள்

கோவை அருகே ஓட்டல் ஊழியர் தற்கொலை
கோவை:
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அக்ர ஹாரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 52). இவர் கடந்த 2 ஆண்டுகளாக கோவை ராம்நகரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் விஜய குமார் மூச்சுதிணறல் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை ஓட்டலின் மொட்டை மாடி பகுதிக்கு விஜயகுமார் சென்றார். அங்கு திடீரென கத்தியை எடுத்து தனது கழுத்தை விஜயகுமார் அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியே சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் காட்டூர் போலீசார் விரைந்து வந்து விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் விஜயகுமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.