என் மலர்
செய்திகள்

தேவிபட்டிணத்தில் கல்லூரி மாணவி மாயம்
தேவிபட்டிணத்தில் வீட்டில் இருந்த கல்லூரி மாணவி மாயமானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராமநாதபுரம்:
தேவிபட்டிணம் இரணியன் வலசையை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் சுனா (வயது 19) இவர், தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த 15-ந்தேததி இரவு சுனா வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார். ஆனால் நள்ளிரவில் அவரை காணவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த வெள்ளைச்சாமி பல இடங்களிலும் மகளை தேடினார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தேவிபட்டிணம் போலீசில் வெள்ளைச்சாமி புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து மாயமான சுனாவை தேடி வருகிறார்.
Next Story