என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடந்த ஆண்டில் மட்டும் 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது: போலீசார் நடவடிக்கை
    X

    கடந்த ஆண்டில் மட்டும் 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது: போலீசார் நடவடிக்கை

    கடந்த ஆண்டில் ரேசன் அரிசியை திரும்ப திரும்ப கடத்தியதாக 12 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ரேசன் கடையில் மலிவு விலையில் வழங்கப்படும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, உளுந்து, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வெளி மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யபடுவதை கண்காணிக்க உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உள்ளனர்.

    சமீப காலமாக ரேசன் அரிசி, பருப்பு வகைகள், சர்க்கரை ஆகியவை அதிகளவில் கர்நாடகா மாநிலத்துக்கு கடத்தப்பட்டு வருவாக புகார் எழுதது. இதை தடுக்க உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.இது குறித்து உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது.-

    கடந்த ஆண்டு அத்தியாவசிய பொருட்களை கடத்தியதாக 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு தான் ரேசன் அரிசி, பருப்பு வகைகள் கடத்தபட்டுள்ளன.

    இருச்சக்கர வாகனங்களில் அதிகளவில் ரேசன் அரிசிகள் கடத்தப்பட்டுள்ளன. பஸ்,லாரிகள் மூலமாகவும் அவ்வபோது கடத்தி உள்ளனர்.

    இருச்சக்கர வாகனங்களில் செல்வோர் வாகன சோதனையின் போது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். இதில் 12 பேர் ரேசன் அரிசியை திரும்ப திரும்ப கடத்தியதால் அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு உள்ளனர். மொத்தம் 110 குவிண்டால் அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கடந்த ஆண்டு மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

    Next Story
    ×