என் மலர்

  செய்திகள்

  திண்டுக்கல் அருகே நர்சிங் மாணவியை காரில் கடத்தி சென்ற வாலிபர்
  X

  திண்டுக்கல் அருகே நர்சிங் மாணவியை காரில் கடத்தி சென்ற வாலிபர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நர்சிங் மாணவியை காரில் கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள அரசம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் மகள் கவிதா (வயது17). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த காந்தி (27) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

  இந்த காதலுக்கு கவிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கவிதாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த விவரம் காந்திக்கு தெரியவந்தது. நேற்று இரவு காரில் வந்த காந்தி, கவிதாவை கடத்தி சென்று விட்டார். அதிகாலையில் இந்த விவரம் தெரிய வரவே அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

  இது குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மாணவியையும் அவரை கடத்தி சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×