என் மலர்

  செய்திகள்

  தேவாரம் அருகே குடிபோதையில் போலீசை தாக்கிய 2 பேர் கைது
  X

  தேவாரம் அருகே குடிபோதையில் போலீசை தாக்கிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவாரம் அருகே குடிபோதையில் போலீசை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தேனி:

  தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் ராஜேஸ்கண்ணன். இவர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு செல்லாயிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

  அப்போது அங்கிருந்த ஈஸ்வரன் மகன் ஜெயக்குமார் (வயது19), ராஜா மகன் தங்கமணி (25), முகமது காசிம் மகன் சித்திக் (24), சடையாண்டி மகன் செல்வஆனந்த் (24) ஆகியோர் குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறாக பேசிக்கொண்டிருந்தனர். இதனை ராஜேஸ்கண்ணன் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கல்லால் ராஜேஸ்கண்ணனை தாக்கி அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது குறித்து தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமணி மற்றும் சித்திக்கை கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×