என் மலர்

  செய்திகள்

  திருப்பூரில் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
  X

  திருப்பூரில் மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையில் கல்லை போட்டு கணவர் கொல்ல முயன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  திருப்பூர்:

  திருப்பூர் அருகே அணைமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவரது மனைவி வள்ளி (30). இவர்கள் இருவரும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

  இந்த நிலையில் வள்ளி, அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரிடம் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட செந்தில்குமார் , மனைவியை கண்டித்து வந்தார்.

  இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  இந்த நிலையில் நேற்று இரவும் இதுகுறித்து கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

  பின்னர் செந்தில்குமார், வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்து தூங்க சென்றார்.

  அப்போது நள்ளிரவில் வள்ளி வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். மனைவியின் நடத்தையால் வேதனை அடைந்து வந்த செந்தில்குமார், திடீரென வீட்டின் அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்தார். பின்னர் மனைவி வள்ளி அருகே சென்று அவரது தலையில் ஓங்கி போட்டார். இதில் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் வள்ளி உயிருக்கு போராடி கூச்சல் போட்டார். இதனால் செந்தில் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

  சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வள்ளி ரத்த காயத்துடன் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  இந்த சம்பவம் பற்றி திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

  இதற்கிடையே அப்பகுதியில் அதிகாலையில் சுற்றி திரிந்த செந்தில் குமாரை போலீசார் கைது செய்தனர்.

  நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி தலையில் கல்லை போட்டு கணவர் கொல்ல முயன்ற சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×