என் மலர்

    செய்திகள்

    பூதலூர் அருகே வீட்டின் ஓடுகளை உடைத்து தாக்குதல்: 2 பேர் கைது
    X

    பூதலூர் அருகே வீட்டின் ஓடுகளை உடைத்து தாக்குதல்: 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பூதலூர் அருகே வீட்டின் ஓடுகளை உடைத்து தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள நாச்சியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் மனைவி வேதவள்ளி (50). விவசாய தொழிலாளி, இவரது மகன் காளிமுத்துக்கும் பூதலூர் அய்யனாபுரம் சாலை பகுதியை சேர்ந்த சிலருக்கும் பூதலூர் ரெயிலடியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த தகராறு காரணமாக அய்யனாபுரம் சாலை பகுதியைச்சேர்ந்த வடிவேல்(22), தமிழரசன்(23) மதுசூதனன்(26), பிரகாஷ்25) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து நாச்சியார்பட்டி சென்று வேதவள்ளியின் வீட்டின் ஓடுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். ஏன்இப்படி செய்கிறீர்கள் என்று கேட்ட பக்கத்து வீட்டு காரர் அம்பலவாணனை கம்பியால் தாக்கி உள்ளனர். அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து வேதவள்ளி பூதலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அம்மாதுரை வழக்கு பதிவு செய்து மதுசூதனன், பிரகாஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×