என் மலர்

    செய்திகள்

    அழகப்பபுரத்தில் அனுமின் நிலைய ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    அழகப்பபுரத்தில் அனுமின் நிலைய ஊழியர் மனைவியிடம் 7 பவுன் நகை பறிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அழகப்பபுரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    அஞ்சுகிராமம்:

    அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிவஜோதி (வயது35).

    இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சிவஜோதியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர்.
    அப்போது சிவஜோதி திடுக்கிட்டு எழுந்தார். மர்ம நபர்களை பார்த்ததும் அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை சிவஜோதியிடம் கேட்டறிந்தனர்.

    இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1ரூ. லட்சம் ஆகும்.
    Next Story
    ×