search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    கொடைக்கானல்:

    மாட்டு பொங்கல் தினத்தையொட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

    இதனால் கொடைக்கானல் களைகட்டி உள்ளது. பிரையண்ட் பூங்கா, கோக்கர் வாக்ஸ், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு சென்று கண்டு மகிழ்ந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் குதிரை சவாரியிலும் சுற்றி வந்து இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

    ஏராளமானோர் மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் கொடைக்கானலில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

    கொடைக்கானல் மேல் மலைப்பகுதியான மன்னவனூரிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர். அங்கு புல்வெளி சூழல் பகுதியை பார்வையிட்டு மகிழ்ந்தனர். மன்னவனூர் ஆத்துப்பாலம், ஆட்டுப்பண்ணை உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று பார்த்தனர்.

    போதிய பஸ் வசதி இல்லாததால் சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்களே அதிகம் வந்தனர். ஒருசிலர் வாடகை கார் அமர்த்தி வந்தனர். மன்னவனூர் பகுதியில் கிராம மக்கள் இன்று பாரம்பரிய முறைப்படி மாட்டுப்பொங்கல் கொண்டாடினர். இதில் சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×