என் மலர்

  செய்திகள்

  கூடக்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: தொழிலாளி பலி
  X

  கூடக்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து: தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடக்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார். இச்சம்பவம் குறித்து போலுசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பேரையூர்:

  அருப்புக்கோட்டையை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது31), தனது நண்பர் சந்திரசேகரனுடன் பாதயாத்திரையாக பழனி புறப்பட்டார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூக் கோவில் போலீஸ் சரகம் பாரபத்தி பகுதியில் அவர்கள் வந்தபோது, அங்கு ஓரு மோட்டார் சைக்கிள் வேகமாக வந்தது.

  அந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக, பாதயாத்திரை பக்தர்கள் மீது மோதியது. அதே வேகத்தில் சென்று நிலைதடுமாறி சரிந்து விழுந்தது.

  இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் தலையில் காயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். பாத யாத்திரை பக்தர்கள் சிவ சுப்பிரமணியன், சந்திர சேகரன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

  விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கூடக்கோவில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

  இதில் பலியானவர் அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த ராஜசேகர் மகன் கட்டிடத் தொழிலாளி சதீஷ்குமார் (24) எனத் தெரிய வந்தது. அவரது உடல் பிரேத பரி சோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயம் அடைந்த 2 பேரும் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Next Story
  ×