என் மலர்tooltip icon

    செய்திகள்

    குன்னத்தில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா
    X

    குன்னத்தில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா

    பொங்கல் பண்டிகையையொட்டி குன்னம் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள ரேஷன் கடையில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா நடைபெற்றது.
    குன்னம்:

    பொங்கல் பண்டிகையையொட்டி குன்னம் கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள ரேஷன் கடையில் இலவச வேட்டி-சேலை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.

    இதில் குன்னம் தாசில்தார் தமிழரசன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேந்திரன், குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதா முருகேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், வரகூர் வருவாய் ஆய்வாளர் மாலதி, கிராம நிர்வாக அலுவலர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் குன்னம் கிராமத்தை சேர்ந்த 1,738 பேருக்கு விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டது.
    Next Story
    ×