என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அருகே சவரத் தொழிலாளி மீது தாக்குதல்: தந்தை-மகனிடம் விசாரணை
    X

    நெய்வேலி அருகே சவரத் தொழிலாளி மீது தாக்குதல்: தந்தை-மகனிடம் விசாரணை

    நெய்வேலி அருகே கடன் பிரச்சனையில் சவரத் தொழிலாளியை தாக்கிய தந்தை மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெய்வேலி:

    நெய்வேலி அருகே உள்ள மந்தாரகுப்பம் பழைய ரெயில்வே கேட் காலனி பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 26).

    மந்தாரகுப்பத்தில் சவர கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர். வேலு மகன் தமிழ் (25). கடந்த சில மாதத்திற்கு முன்பு கடை விரிவாக்கத்திற்காக சிலம்பரசன் தமிழிடம் கடன் வாங்கினார்.

    இந்த நிலையில் தமிழ் தனது தந்தை வேலுவை அழைத்துக்கொண்டு சிலம்பரசனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே தமிழ் அவரது தந்தை வேலு ஆகிய 2 பேரும் சேர்ந்து சிலம்பரசனை தாக்கினர். காயம் அடைந்த சிலம்பரசன் தனியார் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து சிலம்பரசன் மந்தாரகுப்பம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்குப்பதிவு செய்து தமிழ், வேலுவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×