என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதய் திட்டத்தினால் தமிழகத்திற்கு ரூ.11000 கோடி பயன் கிடைக்கும்
    X

    உதய் திட்டத்தினால் தமிழகத்திற்கு ரூ.11000 கோடி பயன் கிடைக்கும்

    உதய் திட்டத்தில் இணைந்திருப்பதால் வட்டி சேமிப்பு, மின் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மூலம் தமிழகத்திற்கு ரூ.11000 கோடி அளவுக்கு பயன் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ‘உதய்’ மின் திட்டத்தில் 21-வது மாநிலமாக தமிழகம் இணைந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் டெல்லியில் இன்று கையெழுத்தானது. மத்திய மின்சாரத்துறை இணை மந்திரி பியூஷ் கோயல், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    எனவே வட்டி சேமிப்பு, மின் இழப்பு குறைத்தல், மின் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் உதய் மூலம் தமிழகத்திற்கு ரூ.11000 கோடி அளவுக்கு பயன் கிடைக்கும் என மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், உதய் திட்டத்தில் இணைந்ததன் மூலம் இந்த வருடம் 2500 கோடி ரூபாய் வரை இழப்பு குறையும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தங்கமணி பேசினார்.

    மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-

    தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்திக்கொள்கிறோம். அவர் மிக திறமையான தலைவர்.

    மத்திய அரசு தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மிக குறுகிய காலத்தில் தமிழக அரசுடன் பேசி உதய் திட்டத்தில் இணைவது குறித்த உடன்பாட்டை எட்டியுள்ளோம். தொடாந்து தமிழகத்திற்கு மத்திய அரசு நிலக்கரி வழங்க வேண்டும் என பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்.

    மின்துறையில் மாற்றங்களை கொண்டு வந்து, தொழில் நிறுவனங்கள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்யவே உதய் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடை இல்லா மின்சாரம் வழங்குவதே மத்திய அரசின் இலக்கு ஆகும். இதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும்.

    தமிழகத்தைப் பொருத்தவரை மின்வாரியம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கினாலும் மக்களுக்கு சேவை செய்யும் நிலையில் உள்ளது. அந்த நிலை இனி மாறும். உதய் திட்டத்தில் இணைவது தொடர்பாக அடுத்தகட்டமாக கேரளத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×