என் மலர்
செய்திகள்

பனப்பாக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
நெமிலி:
பனப்பாக்கம் சின்ன காலனியை சேர்ந்தவர் ஜோதி (வயது 45). இவரது மனைவி கலைவாணி (30). இருவரும் அருகிலுள்ள தென்மாம்பாக்கம் பகுதி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்கள். திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிந்து, இன்று அதிகாலை 3 மணியளவில் ஜோதி வேலைக்கு செல்ல மனைவியை எழுப்பினார். அதற்கு நீ முதலில் போ நான் சற்று நேரம் கழித்து வருகிறேன் என்று கலைவாணி கூறினார். இதனால் ஜோதி மட்டும் வேலைக்கு சென்றார். காலை 5 மணியாகியும் மனைவி வராததால் ஜோதி வீட்டுக்கு சென்று அழைத்துவர வந்தார். ஆனால் வரும் வழியில் உடல் கருகிய நிலையில் கலைவாணி பினமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே வீட்டின் அருகே சென்று ஊர் பொதுமக்களை அழைத்து வந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அருகில் ஒரு பாத்திரத்திலும் பிளாஸ்டிக் வாளியிலும் மண்ணெண்ணை சிறிதளவு இருந்தது. நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.






