என் மலர்
செய்திகள்

ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு உடனே செயல்பட வேண்டும்: வைகோ
ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு ஒருநாள் கூடத் தாமதிக்காமல், உடனே செயல்பட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் இளம் பெண்களும், மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுப் போட்டித் தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்த்து எழுந்துள்ளனர்.
எனவே, மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை உளவுத்துறையின் மூலம் மத்திய அரசு அறிந்து கொள்ள வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பதற்குரிய நடவடிக்கைகளை ஒருநாள் கூடத் தாமதிக்காமல், மத்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.
இல்லையேல், தமிழகத்தில் தடையை மீறி தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் தாமாகவே ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை, மத்திய அரசுக்கு மாநில அரசு உணர்த்த வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Next Story