என் மலர்

  செய்திகள்

  படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல்: ராமேசுவரம் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு
  X

  படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல்: ராமேசுவரம் மீனவர்கள் கூட்டத்தில் முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  படகுகளை விடுவிக்க கோரி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ராமேசுவரம் மீனவர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

  ராமேசுவரம்:

  ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் மீனவர் சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தின் தலைவர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இலங்கை சிறையில் 51 பேர் விடுதலை செய்ய காரணமாக இருந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

  மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 20 மீனவர்களையும், உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 128 படகுகளையும் விடுவிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, மூழ்கிய 18 படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

  பாரம்பரிய கடல் பகுதியில் மீண்டும் மீன் பிடிக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும். இத்தீர்மானங்களை நிறை வேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

  Next Story
  ×