என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டை அருகே பஸ் மோதி அரிசி மண்டி உரிமையாளர் பலி
    X

    கந்தர்வக்கோட்டை அருகே பஸ் மோதி அரிசி மண்டி உரிமையாளர் பலி

    கந்தர்வக்கோட்டை அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் அரிசி மண்டி உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். (வயது 45) அதே பகுதியில் அரிசி மண்டி வைத்து நடத்தி வந்தார்.
    இந்த நிலையில் இன்று அதிகாலை தமிழ்வாணன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயலை பார்ப்பதற்காக சென்றுள்ளார.

    அப்போது புதுக்கோட்டை சாலையை கடக்க முயற்சி செய்தார். அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது பலமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்வாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்த புதுக்கோட்டை டி.எஸ்.பி. பாலகுரு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவரை கைது செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இதையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×