என் மலர்

  செய்திகள்

  ஜெயங்கொண்டம் அருகே மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை
  X

  ஜெயங்கொண்டம் அருகே மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜெயங்கொண்டம் அருகே மனைவி குடிக்க பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  ஜெயங்கொண்டம்:

  ஜெயங்கொண்டம் அருகே காமரசவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் ரமேஷ் (வயது 30).  இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.  தினமும் குடிப்பதற்காக பணம் கேட்டு மனைவி ராஜவள்ளியிடம் தொந்தரவு செய்து வந்துள்ளார். 

  கடந்த மாதம் 13-ம் தேதி ராஜவள்ளியிடம் பணம் கேட்டுள்ளார்.  என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.  இதில் ஆத்திரமடைந்து வெளியில் சென்றவர் மீண்டும் தனது வீட்டிற்கு வந்து வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார்.  அப்போது ராஜவள்ளி கணவர் ரமேஷிடம் கேட்டபோது  விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார்.

  உடன் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் துணையுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து ராஜவள்ளி தூத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×