என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே சுகாதார அலுவலர் வீட்டில் நகை- பணம் திருட்டு
    X

    செந்துறை அருகே சுகாதார அலுவலர் வீட்டில் நகை- பணம் திருட்டு

    செந்துறை அருகே சுகாதார அலுவலர் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, மற்றும் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள  குழுமூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர்  வெங்கடாசலம் (வயது 35), சுகாதார அலுவலர். இவர் பெரியகுறிச்சியில் உள்ள தனது மாமனார் சின்னதுரை வீட்டுக்கு குடும்பதுடன் 3 நாட்கள் சென்றுள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ளவர்கள்  வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை வெங்கடாசலத்துக்கு தெரிவித்தனர்.
    விரைந்து வந்த வெங்கடாசலம் வீட்டின் உள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. 

    பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம்  திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து தங்க நகை திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சுகாதார அலுவலர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×