என் மலர்
செய்திகள்

நாகையில் 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கினார்
நாகையில் 7 பயனாளிகளுக்கு கல்வி நிதியுதவி மற்றும் கண் கண்ணாடி நிதியுதவி கலெக்டர் பழனிச்சாமி வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு கலெக்டர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் படைவீரர்கள் தங்களது குறைகளை மனுவாக தெரிவித்தனர். பின்னர் 7 பயனாளிகளுக்கு கல்வி நிதியுதவி மற்றும் கண் கண்ணாடி நிதியுதவி ஆகியவற்றை வழங்கினார்.
கூட்டத்தில் உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) வேலு, மாவட்ட சமூகநல அலுவலர் ஜெயமீனா, அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் படை வீரரர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






