என் மலர்
செய்திகள்

கல்பாக்கம் அருகே டாஸ்மாக் கடையில் ரூ.16 ஆயிரம் மது பாட்டில்கள் கொள்ளை
கல்பாக்கம் அருகே மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் பக்கிங் காம் கால்வாய் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. வியாபாரம் முடிந்ததும் டாஸ்மாக்கடையை ஊழியர்கள் பூட்டி சென்றனர்.
நேற்று காலை கடையை திறக்க வந்தனர். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாபெட்டியில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருந்தது.
இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






