என் மலர்

    செய்திகள்

    அரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை
    X

    அரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரூர் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரூர்:

    அரூர் அருகே உள்ள பெரியபண்ணிமடுவு கிராமத்தை சேர்ந்தவர் வேலுமணி(38). இவர் மொரப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    வேலுமணியின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அவருடைய தந்தையும், தாயும் மாடு மேய்க்க சென்று விட்டனர். வேலுமணியின் மகன் மனோஜ்(13) மட்டும் வீட்டில் இருந்தார்.

    அப்போது 24 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பில் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை நம்பி மனோஜ் வீட்டினுள் பீரோவில் பில்லை தேடினார். அப்போது அந்த மர்ம நபர் பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகையை திருடி கொண்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து வேலுமணி அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×