என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களின் நேரம் மாற்றம்
By
மாலை மலர்30 Dec 2016 9:52 AM GMT (Updated: 30 Dec 2016 9:52 AM GMT)

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று செல்லவேண்டிய சில ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் ரெயில் மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. இணை ரெயில்கள் வருவதற்கு தாமதம் ஆவதால் மற்ற நகரங்களில் இருந்து புறப்படும் ரெயில்களின் நேரமும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகிறது.
அவ்வகையில், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து இன்று புறப்படவேண்டிய ரெயில்களின் நேரமும் மாற்றியமைக்கப்பட்டு தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 7.15க்கு புறப்படவேண்டிய சென்ட்ரல்-டெல்லி சராய் ரோகிலா கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் இரவு 10.30 மணிக்கு புறப்படும்.
சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் பதில் 7.30க்கு புறப்படும்.
சென்ட்ரல்-சத்ய சாய் பிரசாந்தி நிலையம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்குப் பதில் 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு (31-12-2016) புறப்படும்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படவேண்டிய எழும்பூர் - மும்பை சிஎஸ்டி சிறப்பு ரெயில், 9 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
×