search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் அனுமதி
    X

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் அனுமதி

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 10 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த மாதத்தில் மட்டும் 73 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் ஒரே நாளில் சூலூரை சேர்ந்த முத்துசாமி என்பவரது 10 மாத கைக்குழந்தை மதிவாணன், கெம்பட்டி காலனியை சேர்ந்த நந்தகுமார் (வயது 20), வேலாண்டிபாளையத்தை சேர்ந்த அபிஷேக் (3), திருப்பூரை சரவணன் (9), சாமுண்டிபுரத்தை சேர்ந்த சோபியா (29), தினேஷ்(18) ஆகிய 7 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த முகமது அனிஸ் (19), கோவையை சேர்ந்த வத்சலா (36), சாகில் (21) ஆகிய 3 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

    தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 10 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு டாக்டர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    Next Story
    ×