என் மலர்

    செய்திகள்

    கபிஸ்தலம் அருகே வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலி
    X

    கபிஸ்தலம் அருகே வாகனம் மோதி பேக்கரி கடை ஊழியர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கபிஸ்தலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் பேக்கரி கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கபிஸ்தலம்:

    தஞ்சை அருகே கபிஸ்தலத்தை அடுத்த புத்தூர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த முத்து மகன் தெட்சிணாமூர்த்தி (வயது 29). இவர் கடந்த 24-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வடசருக்கை மெயின் ரோட்டில் சென்றார். அப்போது பின்னால் வந்த ஒரு 4 சக்கர வாகனம் தெட்சிணாமூர்த்தி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு சய்து தெட்சிணாமூர்த்தி மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

    விபத்தில் பலியான தெட்சிணாமூர்த்திக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பத்மா என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் தெட்சிணாமூர்த்தி விபத்தில் இறந்துவிட்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×