என் மலர்

  செய்திகள்

  வேலூரில் ஆட்டோ டிரைவர் தற்கொலை
  X

  வேலூரில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வேலூர்:

  வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி.ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 34) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜோதிலட்சுமி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. வெங்கடேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

  இந்த நிலையில் நேற்று மதியம் இவர்களுக்கு இடையே மீண்டும் குடும்பப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வெங்கடேசன் குடிபோதையில் இருந்துள்ளார். திடீரென அவர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×