என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்
  X

  சேலத்தில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் குழந்தையுடன் இளம்பெண் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மாயமான தாய், மகனை தேடி வருகிறார்கள்.

  கொண்டலாம்பட்டி:

  சேலம் கோரிமேடு அந்தியூர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி சரண் பிரியதர்ஷினி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி ஜோஷ்வராஜ் (5) என்ற மகனும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

  இந்த நிலையில் சரண் பிரியதர்ஷினி அதே பகுதியில் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து கடந்த 2-ந் தேதி திடீரென்று சரண் பிரியதர்ஷினியும், ஜோஷ்வராஜும் மாயமாகி விட்டனர்.

  இதுகுறித்து சரண் பிரியதர்ஷினியின் தந்தை முருகேசன் நேற்று கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாய், மகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  Next Story
  ×